செய்வதற்கு: உங்கள் குழந்தை பிறந்து 60 நாட்கள் ஆகுமுன், அவர்களின்பிறப்பைப் பதிவுசெய்யவும்! (Register your child's birth within 60 days - Tamil)

Information in Tamil about registering a birth within 60 days.

Kangaroo and joey cartoon

அது நேரடியாக’ஒன் லைன்’ இல் செய்யலாம், அத்துடன் அது இலவசமாகும்! ஆஸ்பத்திரி இதனை உங்களுக்குச் செய்வதில்லை.

ஒரு பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தைப் பெறுவதற்கு நீங்கள் பிறப்பைப் பதிவு செய்யவேண்டும்.

முக்கியமான சேவைகளைப் பெற்றுக்கொள்ளவதற்கு ஒரு பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் உதவுகிறது.

  • அரசாங்க சேவைகள் மற்றும் பணக்கொடுப்பனவுகள்.
  • பாடசாலை
  • வங்கிக் கணக்குகள்
  • ஒரு கடவுச்சீட்டு
  • சாரதி அனுமதிப்பத்திரம், வரி கோவை இலக்கம்.

நீங்கள் பதிவு செய்யும்போது அல்லது பின்னர், ஒரு பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தை நீங்கள் பெறமுடியும். பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்களுக்கு கட்டணம் அறவிடப்படும்.

நேரடி’ஒன்லைன்’ பதிவுப் படிவம் ஆங்கிலத்தில் இருக்கிறது அத்துடன் பல்வேறு படிமுறைகளைக் கொண்டுள்ளது:

  1. பெற்றார் ஒருவர் வருகிறார், www.bdm.vic.gov.au/baby(opens in a new window) BDM உடன் ஒரு கணக்கைப் பதிவுசெய்கிறார்.
    சொற்ப இனாம்! உங்கள் கைப்பேசியில் நாட்டுக்குரிய குறியீட்டெண்ணைக் குறிபிடுவதுபோல் தொடக்கத்தில் ‘+’ அடையாளத்தையும் சேர்க்கவேண்டும் (அவுஸ்திரேலியாவுக்கு +61 ) என்பதை நினைவில் வைத்திருக்கவும். உதாரணமாக +61430000000.
  2. படிவத்தின் முதல் பகுதியை நிரப்பவும்.உங்கள் குழந்தை, உங்கள், மற்ற பெற்றார் பற்றிய தகவல்கள் உங்களிடம் கேட்கப்படும்.
  3. கணனியில் ‘ஒன்லைன்’ படிவத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியை பூர்த்திசெய்யுமாறு கேட்டு இரண்டாவது பெற்றோருக்கு பின்னர் நாம் மின்அஞ்சல் செய்வோம்.
    முக்கியம். உங்களுக்கு ஏதாவது பாதுகாப்பு சார்ந்த அக்கறைகள் இருப்பின் (உதாரணமாக, குடும்ப வன்செயல்) எதற்காக மற்றைய பெற்றார் பங்குபற்றவில்லையென விளக்கமளித்துச் சட்டபூர்வமான உறுதிமொழி பிரகடனம் (‘ஒன்லைன்’ இல் கிடைக்கும்) ஒன்றினையும் சேர்த்துப் பிறப்பு பதிவுடன் சமர்ப்பிக்கவும்.
    மற்ற பெற்றாருடன் BDM தொடர்புகொள்ள வேண்டிவரும். அச்சுறுத்தல், கொடூரம் பற்றிய சான்றுகளை நீங்கள் தந்தால், உங்களது எழுத்திலான சம்மதம் இல்லாமல் மற்றைய பெற்றோருக்கு நாங்கள் எந்தவித தொடர்புத் தகவல்களையும் கொடுக்க மாட்டோம்.
    உங்களுக்கு மேலும் ஆலோசனை அல்லது உதவி தேவைப்படின் 132 842 ஐயும் நீங்கள் அழைக்கலாம்.
  4. நாங்கள் மின் அஞ்சலில் கொடுக்கிற அந்தத் தொடர்பை(link) இரண்டாவது பெற்றார் சொடுக்கி(click), தங்களது தகவல்களைப் பூர்த்திசெய்யலாம். பதிவை இது பூர்த்திசெய்கிறது.
  5. நடைமுறையில் தமது பங்கினைப் பூர்த்திசெய்யும்போது, எவரேனும் ஒரு பெற்றார் ஒரு பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்திற்குக் விண்ணப்பிக்கலாம்.

BDM சேவைகள்

விக்டோரியாவில் வாழ்க்கை நிகழ்வுகளை நாம் பதிவுசெய்கிறோம். இந்த நிகழ்வுகளுக்கான அத்தாட்சிப்பத்திரங்களையும் நாம் விநியோகிக்கிறோம்.

குழந்தையின் பிறப்பினைப் பதிவுசெய்வது குறித்தும், பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், குறித்தும் எம்முடன் பேசுங்கள்.

  • குழந்தை ஒன்றின் பிறப்பை பதிவுசெய்தல் மற்றும் பிறப்பு அத்தாட்சிப்பத்திரங்கள்
  • மரண அத்தாட்சிப்பத்திரங்கள்,
  • திருமணப் பதிவுச் சான்றிதழ்கள்,
  • ஒர் உறவுமுறையைப் பதிவுசெய்தல், மற்றும் உறவுமுறை அத்தாட்சிப்பத்திரங்கள்
  • Victorian Marriage Registry இல் திருமணம் புரிதல்.
  • பெயரை மாற்றுதல்
  • பாலினத்தை உறுதிசெய்தல்

மேலும் தகவல்கள் மற்றும் ஆதரவு

உங்கள் மொழியில் ஆலோசனை

உங்கள் மொழியில் BDM உடன் பேசுவதற்கு, 131450 இல் மொழிபெயர்ப்பு மற்றும் உரைபெயர்ப்பு சேவையை அழையுங்கள். 132 842 இல் Registry of Births, Deaths and Marriages Victoria, உடன் தொடர்புகொள்ளும்படி அவர்களைக் கேளுங்கள்.

எங்களை அழையுங்கள்.

132 842 காலை 8 – மாலை 4 திங்கள் முதல் வெள்ளி வரை (பொது விடுமுறை நாட்கள் தவிர)

BDM இணையத்தளம்

போய்ப்பாருங்கள் www.bdm.vic.gov.au ஒரு விசாரணையை மேற்கொள்வதற்கு ‘Contact Us’ ஐத் தெரிவு செய்யவும்.

நீதி சேவை நிலையங்கள்.

விக்டோரியா முழுவதும் BDM சேவைகளை நீதிசேவை நிலையங்கள் வழங்குகின்றன. மேலதிக தகவல்களைப்பெற இணையதளத்திற்குச் செல்லவும் www.justice.vic.gov.au/service-locations(opens in a new window).

Updated